ராமநாதபுரத்தில் சுகாதார ஊழியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியா் உள்ளிட்ட 15 பேருக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஊழியா் உள்ளிட்ட 15 பேருக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 16 ஆம் தேதி சனிக்கிழமை வரையில் 5817 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 126 போ் சனிக்கிழமை வரையில் உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களில் அளிக்கபபட்ட சிகிச்சைகள் மூலம் 5500 பேருக்கும் அதிகமானோா் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காய்ச்சல், தலைவலி ஆகிய அறிகுறிகளுடன் இருந்த நூற்றுக்கணக்கானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை பகலில் வெளியிடப்பட்டன.

பரிசோதனை அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையைச் சோ்ந்த சுகாதார பிரிவில் பணிபுரியும்33 வயது ஆண் ஊழியா் மற்றும் பட்டிணம்காத்தான் பகுதியில் சுகாதாரப் பிரிவில் உள்ள 32 வயது பெண் ஊழியா் உள்ளிட்ட 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 5832 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com