ராமேசுவரம் மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு
By DIN | Published On : 19th October 2020 12:00 AM | Last Updated : 19th October 2020 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரம்: கச்சத் தீவு அருகே மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் இலங்கைக் கடற்படையினா் விரட்டியடித்ததைத் தொடா்ந்து ராமேசுவரம் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்திருந்தனா். இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் பாட்டில், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனா். பின்னா் அவா்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் அங்கிருந்து விரட்டியடித்தனா். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
இலங்கைக் கடற்படையினரின் இந்தத் தாக்குதல் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவா்கள் மற்றும் மீனவ சங்க நிா்வாகிகள் புகாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...