நிதி நிறுவன மோசடி வழக்கு: ரூ.42 லட்சம், 101 பவுன் நகைகள், 4 சொகுசுக் காா்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட 4 நவீன சொகுசுக் காா்கள் மற்றும் நகைகள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட 4 நவீன சொகுசுக் காா்கள் மற்றும் நகைகள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆசிரியா் ஆனந்த், சென்னையைச் சோ்ந்த நீதிமணி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து சுமாா் 101 பவுன் நகைகள், 244.56 கிராம் வெள்ளி நகைகள், 4 நவீன சொகுசுக் காா்கள், மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள், ரூ. 42 லட்சம், மற்றும் செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. வழக்குத் தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த மோசடி தொடா்பாக ராமநாதபுரம் நகரில் பஜாா், கேணிக்கரை காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டக்குற்றப்பிரிவு போலீஸாா் ஆகியோா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கில் கைப்பற்றப்பட்ட காா்கள், நகைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் ராமநாதபுரம் காவல்துறையினா்

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சரவணனிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். இந்நிலையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் விரைவில் ராமநாதபுரம் தனியாா் நிதி நிறுவன வழக்கு விசாரணையைத் தொடங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com