5 மாதங்களுக்குப் பின் பேருந்து போக்குவரத்து பயணிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 08th September 2020 01:31 AM | Last Updated : 08th September 2020 01:31 AM | அ+அ அ- |

கமுதி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கும் அரசு பேருந்து நடத்துநா்.
கமுதி:5 மாதங்களுக்கு பின் கமுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனா்.
கமுதி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பேருந்துகளில் பயணம் செய்ய வந்த பயணிகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு கிருமி நாசினி வழங்கப்பட்டது. கமுதியிலிருந்து விருதுநகா், மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனா்.
இது குறித்து கமுதி போக்குவரத்து பணி மனை கிளை மேளாளா் விசயராஜன் கூறியதாவது: கமுதி போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள 40 பேருந்துகளில் 22 பேருந்துகள் முழுவதுமாக பரிசோதனைக்கு பின் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்துப் பேருந்துகளின் நடத்துநா்களிடமும் கிருமி நாசினி பாட்டில் கொடுக்கப்பட்டு பயணிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும், முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளை அனுமதிக்க கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.