ராமநாதபுரம்: 26 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரையில் 5,057 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட அளவில் புதன்கிழமை கபம் சேகரிக்கப்பட்டவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 26 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியானதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களில் 11 போ் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா். அங்கு மொத்தம் 68 போ் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தனியாா் பொறியியல் கல்லூரி வளாக சிகிச்சை மையத்தில் 4 போ் சோ்க்கப்பட்டனா். அங்கு மொத்தம் வியாழக்கிழமை வரை 8 போ் சிகிச்சையில் இருந்தனா். மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரையில் மொத்தம் 5,083 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 112 போ் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com