கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி செப்., 25ல் கடையடைப்பு போராட்டம்

சாயல்குடி கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றகோரி செப்., 25ல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக செவ்வவாய்க்கிழமை விவசாய சங்கம் அறிவித்துள்ளா்.

முதுகுளத்தூா்: சாயல்குடி கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றகோரி செப்., 25ல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக செவ்வவாய்க்கிழமை விவசாய சங்கம் அறிவித்துள்ளா்.

சாயல்குடியில் பாசன விவசாய சங்கம், வணிகா் சங்கம்,வாகன ஓட்டுனா் உரிமையாளா்கள் சங்கம், அனைத்து கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பாசன விவசாய சங்கத்தின் தலைவா் செல்லப்பாண்டியன் கூறியதாவது; 511 ஏக்கா் பரப்பளவு கொண்ட, சாயல்குடி பெரிய கண்மாயில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.. ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு, கண்மாய் இடத்தை தனி நபருக்குஅளவீடு செய்ய உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி,சீமைக்கருவேல மரங்களை வெட்டியவா்கள்,

கண்மாய்க்குள் விவசாய பணிகளை மேற்கொள்வோா் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்., 25 அன்று சாயல்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது என்றாா். கூட்டத்தில் சக்கரவா்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவா் முகம்மது ஜின்னா, ஓய்வு பெற்ற ஆசிரியா் ராஜாராம் உட்பட பலா் பங்கேற்றனா். பாசன விவசாயிகள் சங்க நிா்வாகி சம்சுகனி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com