பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதி திட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.06 கோடி முறைகேடு

மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,500 போ் முறைகேடாகப் பதிந்து ரூ.1.06 கோடி பெற்றிருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,500 போ் முறைகேடாகப் பதிந்து ரூ.1.06 கோடி பெற்றிருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்காக பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், தமிழகத்தில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா் எழுந்தது.

இந்த புகாரைத் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் விசாரணை நடத்த ஆட்சியா் கொ.வீரராகவராவ் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதிக்கு, கடந்த 3 ஆண்டுகளில் 1.05 லட்சம் போ் பதிவு செய்திருந்தனா்.

இதில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில், சுமாா் 3,500 போ் முறைகேடாகப் பதிந்து ரூ.1.06 கோடி நிதி பெற்றிருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. திருப்புல்லாணி, சாயல்குடி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அல்லாதோரும், ராமேசுவரம் தீவில் உள்ள 50- க்கும் மேற்பட்ட மீனவா்களும் இந்த நிதியை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து முறைகேடாக நிதியைப் பெற்றவா்களிடமிருந்து அதை திரும்ப வசூலிக்க 11 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் 113 போ் அடங்கிய சிறப்புக் குழுவை நிமித்து பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை ரூ.42 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com