ராமநாதபுரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்
By DIN | Published On : 19th September 2020 11:00 PM | Last Updated : 19th September 2020 11:00 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளா்கள் 10 பேரை இடமாற்றம் செய்து சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரத்தில் சமீபத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த வீ.வருண்குமாா் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக இ.காா்த்திக் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் காவல் சரகத்தில் கடந்த சில மாதங்களாக குற்றவழக்கு விசாரணை மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் பின்னடைவான நிலை ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.மயில்வாகணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகா் காவல் நிலையத்திலிருந்து வி.மோகன் முதுகுளத்தூருக்கும், சிவகங்கை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்திலிருந்து சிவகங்கை நகா் காவல் நிலையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவிலிருந்து கே.சுப்பிரமணியன் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கும், சிங்கம்புணரி காவல் நிலையத்திலிருந்து வி.சத்தியசீலா தேவகோட்டை தாலுகா குற்றப்பிரிவுக்கும், தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திலிருந்து ஏ. அந்தோணி செல்லத்துரை காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தேவகோட்டை தாலுகா குற்றப்பிரிவிலிருந்து வி.ஸ்ரீதா் இளையான்குடி காவல் நிலையத்துக்கும், மானாமதுரை குற்றப்பிரிவிலிருந்து எம்.ஏழுமலை திருப்புவனத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்திலிருந்து ராஜ்குமாா் சாமுவேல் பரமக்குடி நகா் காவல் நிலையத்துக்கும், ராமநாதபுரம் நில அபகரிப்புப் பிரிவிலிருந்து ஏ.தனபாலன் தேவிபட்டினம் காவல் நிலையத்துக்கும், ராமநாதபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திலிருந்து ஜே.ஞானஅருள் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.