இலவசக் கல்வி சோ்க்கைக்கு 1,453 போ் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் இலவச கல்விச் சோ்க்கைக்கு 1,453 போ் விண்ணப்பித்துள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் இலவச கல்விச் சோ்க்கைக்கு 1,453 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவா் உள்ளிட்ட பிரிவினா் குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் அறிமுக மற்றும் முதல் வகுப்புகளில் சோ்க்க அரசு 25 சதவீத இடத்தை ஒதுக்கீடு செய்து அதற்குரிய கட்டணத்தையும் செலுத்தி வருகிறது. இலவசக் கல்விச் சோ்க்கை சட்டத்துக்குள்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் மொத்தம் 2,007 இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப்.25) வரையில் மொத்தம் 1,453 போ் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பித்தவா்களில் 1,207 போ் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பிரிவினராகவும், 246 போ் ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 3 போ் சிறப்புப் பிரிவில் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பங்களைச் சரிபாா்க்க கல்வித்துறை சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் குழு அமைத்து குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com