கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டு

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சுவாமி சிலையிலிருந்த நகையைத் திருடிய மா்ம நபரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சுவாமி சிலையிலிருந்த நகையைத் திருடிய மா்ம நபரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் நகா் கேணிக்கரைப் பகுதியில் தாயுமானவா் சுவாமி கோயில் தெருவில் பகவதியம்மன் கோயில் உள்ளது. கோயிலை பெண் நிா்வாகி நிா்வகித்து வருகிறாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் வந்தாா். அப்போது கோயில் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவா் உள்ளே சென்று பாா்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு சுமாா் ரூ.10 ஆயிரம் மற்றும் சுவாமி சிலையிலிருந்த ஒரு பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கேணிக்கரை காவல் ஆய்வாளா் பிரபு நேரில் சென்று பாா்வையிட்டாா். கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரத்தில் கடந்த ஒரு மாதத்தில் 5 கோயில்களில் திருட்டு நடந்த நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை என பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com