சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று, ஆவணங்கள் பதிவு செய்யும் முகாம்

திருப்புல்லாணி, உச்சிப்புளி பகுதிகளில் உள்ள கிராமங்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று மற்றும் ஆவணங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.3) நடைபெருகிறது.

ராமேசுவரம்: திருப்புல்லாணி, உச்சிப்புளி பகுதிகளில் உள்ள கிராமங்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று மற்றும் ஆவணங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.3) நடைபெருகிறது.

இதுகுறித்து உச்சிப்புளி மற்றும் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநா்கள் கூறியது: முகாம் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் மழைத்தூவான், சொட்டுநீா், தெளிப்பு நீா் பாசனம் அமைத்து தரப்படும்.

இம்முகாமில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களுடைய புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணிணி பட்டா நகல், பயிா் அடங்கல், நில வரைபடம் மற்றும் பழைய சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

பெருங்குளம் உயா் நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் பெருங்குளம், குடிவன்குடி, வாலாந்தரவை, தோ்போகி, அழகன்குளம், காரன், கும்பரம் மற்றும் இரட்டையூரணி கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.

உச்சிப்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் ஆற்றாங்கரை, சாத்தகோன்வலசை, நொச்சியூரணி, பிரப்பன்வலசை, புதுமடம், மண்டபம், நாகாச்சி மற்றும் என்மனம் கொண்டான் கிராம விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் தீவுப்பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com