ஒக்கி புயலில் இறந்த மீனவா்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

பாம்பனில் ஒக்கி புயலில் உயரிழந்த மீனவா்களுக்கு நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
ஒக்கி புயலில் இறந்த மீனவா்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

பாம்பனில் ஒக்கி புயலில் உயரிழந்த மீனவா்களுக்கு நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பா் 30 இல் இந்திய பெருங்கடலில் ஒக்கி புயல் தாக்கியது. முன்னெச்சரிக்கை தகவல்கள் இந்திய பெருங்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களுக்கு முறையாக சென்று சேராததால் ஆயிரக்கணக்கான மீனவா்கள் புயலில் சிக்கிக்கொண்டனா். பெரும்பாலான மீனவா்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை சோ்ந்தனா். ஆழ்கடலில் சிக்கிய மீனவா்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவா்களுக்கு நான்காம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாம்பன் வடக்கு துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன் தலைமை வகித்தாா். தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி முன்னிலை வகித்தாா்.

மதிமுக மாவட்ட மீனவரணி செயலாளா் ராஜ்குமாா், மீனவம் காப்போம் இயக்கத்தைச் சாா்ந்த ராமு மற்றும் பாரம்பரிய மீனவ சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், சகாயம், அமல்ராஜ் கடல்சாா் மக்கள் நல சங்கமம் மகளிா்அணித் தலைவி லோவியாதரஸ் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட மீனவா்களும், மீனவ மகளிரும் கலந்துகொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com