மீன்வள கணக்கெடுப்பு: ராமநாதபுரத்தில் 180 போ் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா்களுக்கான திட்டங்களை சம்பந்தப்பட்டோருக்கு கொண்டு செல்லும் வகையில் 180 பேரை நியமிக்க உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா்களுக்கான திட்டங்களை சம்பந்தப்பட்டோருக்கு கொண்டு செல்லும் வகையில் 180 பேரை நியமிக்க உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 603 மீனவக் கிராமங்கள் உள்ளன. மீனவா்களிடையே மீன்வளத் துறை திட்டங்களைக் கொண்டு செல்லவும், மீன்வளம் குறித்த கணக்கெடுப்பு நடத்தவும் ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் ஒரு கடல் மீன் புள்ளி விவர சேகரிப்பாளரை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் மாநில அளவில் மொத்தம் 600 கடல் மீன் புள்ளி விவரக் கணக்கெடுப்பாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 போ் நியமிக்கப்படவுள்ளதாக மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீனவக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் பிளஸ் 2 முடித்திருந்தாலும், உயிரியல் சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com