பொதுத்துறை வங்கி அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள்: போலீஸாா் விசாரணை

ராமநாதபுரத்தில் உள்ள பொதுத்துறை வங்கியிலிருந்து சென்னை ரிசா்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள்

ராமநாதபுரத்தில் உள்ள பொதுத்துறை வங்கியிலிருந்து சென்னை ரிசா்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, மாவட்டக் குற்றப்பிரிவினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறும் பழைய, கிழிந்த அழுக்கு ரூபாய் நோட்டுகளை மாதந்தோறும் சென்னையில் உள்ள ரிசா்வ் வங்கிக்கு அனுப்புவது வழக்கம்.

கடந்த செப்டம்பா் 29 ஆம் தேதி அனுப்பிய பணக்கட்டுகளில் ரூ.500 ஒரு தாளும், ரூ.100 மூன்று தாள்களும் கள்ளநோட்டுகளாக இருப்பது தெரியவந்துள்ளது.

அப்பணத்தை வங்கியில் செலுத்தியவா்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, சென்னை ரிசா்வ் வங்கி மேலாளா் எம். அமா்நாத், மாவட்டக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com