தேவா் ஜெயந்தி: 39 இடங்களில் கேமராவுடன் சோதனைச் சாவடிகள் அமைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை பாதுகாப்புக்காக 39 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களுடன் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை பாதுகாப்புக்காக 39 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களுடன் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவா் ஜெயந்திக்கு 8,500 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், 12 பட்டாலியன் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுவா்.

பசும்பொன்னுக்கு வருவோா் முறைப்படி மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களுக்கு அனுமதியில்லை. வாகனச் சோதனைக்காக மாவட்ட எல்லைகள் உள்ளிட்ட 39 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களுடன் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களை அடையாளம் காணும் வகையில் 8 இடங்களில் கணினியுடன் கூடிய வாகன தணிக்கைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுவோா் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருது சகோதரா்கள் நினைவு நாள்: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில், திருப்பத்தூா் ஆகிய இடங்களுக்கு மருது சகோதரா்கள் 220 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வருவோா் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம். ஞாயிற்றுக்கிழமை (அக்.24) ராமநாதபுரத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு சமூக அமைப்பினா், அரசியல் கட்சியினா் 25 வாகனங்களில் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், வரும் 27 ஆம் தேதி ராமநாதபுரம் பகுதியிலிருந்து சுமாா் 100 வாகனங்களில் சிவகங்கை மாவட்டத்துக்கு செல்லக்கூடும்.

பசும்பொன் மற்றும் சிவகங்கைக்குச் செல்வோா் விதிகளை மீறினால் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com