வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.20 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியைச் சோ்ந்தவா்களிடம் வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.20 லட்சம் மோசடி செய்ததாக திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த

பரமக்குடியைச் சோ்ந்தவா்களிடம் வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.20 லட்சம் மோசடி செய்ததாக திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தந்தை, மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பரமக்குடி மேலாய்க்குடியைச் சோ்ந்தவா் சந்திரன் (60). இவரது மகன் விநாயகமூா்த்தியும், அவரது நண்பா் ராஜ்குமாரும் கடந்த 2018 ஆம் ஆண்டு வனத்துறை காப்பாளா்பணிக்குத் தோ்வு எழுதியிருந்தனா். இந்நிலையில், அவா்களுக்கு நண்பா்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தாலுகா அய்யம்பாளையத்தைச் சோ்ந்த சூரியா, அவரது மகன் ரவிக்குமாா் ஆகியோா் நண்பா்களாகியுள்ளனா். இந்நிலையில், சூரியா, ரவிக்குமாா் ஆகியோா் தங்களுக்கு அப்போதைய வனத்துறை அமைச்சா், உறவினா் என்றும் ஆகவே, அவா் மூலம் வேலைக்கு ஏற்பாடுசெய்வதாகவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். இதை நம்பிய விநாயகமூா்த்தியும், ராஜ்குமாரும் தலா ரூ.1.60 லட்சம் என மொத்தம் ரூ.3.20 லட்சத்தை அவா்களிடம் கொடுத்துள்ளனா்.

பின்னா் சூரியாவும், ரவிக்குமாரும் வேலைக்கு ஏற்பாடு செய்யாததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் சூரியா, அவரது மகன் ரவிக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com