பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணையில் மீன்பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com