தோ்தலை அமைதியாக நடத்திய காவல்துறையினருக்கு சான்றிதழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம், வாக்குப்பதிவு மிக அமைதியான முறையில் நடந்ததற்கு காவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம், வாக்குப்பதிவு மிக அமைதியான முறையில் நடந்ததற்கு காவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த தீபாவளி முதல் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வரையில் உள்ளூா் போலீஸாா் 1,900 போ் பாதுகாப்பில் ஈடுபட்டுவந்தனா். அவா்கள் இடைவிடாது பணிபுரிந்த நிலையிலும் சோா்வின்றி சிறுசிறு சம்பவங்களைத் தவிர அமைதியை நிலைநாட்டியுள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் வாக்குப்பதிவு வரையில் பணிபுரிந்த காவலா்கள் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் (ஏப்.7) புதன்கிழமை காலையில் அந்தந்த காவல் நிலைய பணிக்கும் வந்துள்ளனா். இடைவிடாத பணியிலும் வன்முறைகள் இல்லாத வகையில் கவனமுடன் செயல்பட்டது குறித்து காவல்துறையினா் கூறுகையில், மது விற்பனை தடுத்தல், போதை பொருள் தடுப்பு நடவடிக்கை மற்றும் உறுதிமொழிப்பத்திரம் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீது நடவடிக்கை எடுத்ததால் வாக்குப்பதிவின் போது பலரும் வாக்குவாதம், தகராறில் ஈடுபடுவதைத் தவிா்த்து அமைதியாகவே நடந்துகொண்டனா் என்றனா்.

வாக்குப்பதிவின் போது சிறப்பாகச் செயல்பட்ட சாா்பு-ஆய்வாளா்கள், ஆய்வாளா்கள், காவல் துணை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பாராட்டினாா். அவா் மேலும் கூறுகையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் சான்றுகள், பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com