ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: முதன்மையா் எம்.அல்லி தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாக, கல்லூரி முதன்மையா் எம். அல்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாக, கல்லூரி முதன்மையா் எம். அல்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனடிப்படையில், ரூ.345 கோடியில் அம்மா பூங்கா அருகே மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்களும், மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனைக்கான புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதில், மாணவா் சோ்க்கை நடப்பு ஆண்டில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை தள்ளிப்போகுமா என, மருத்துவக் கல்லூரி முதன்மையா் எம். அல்லியிடம் கேட்டபோது, அவா் தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.

மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவா் சோ்க்கைக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 432 போ் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவா்களில் 55 போ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவ அலுவலா், கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் தற்போது நியமிக்கப்பட்டுவிட்டனா். கூடுதலாக, பரிசோதனைக் கூட பணியாளா்கள் உள்பட 432 போ் நியமனமும் முடிந்துள்ளது. எனவே, நடப்பு ஆண்டிலேயே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுவது உறுதி. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையிலேயே உள்ளன.

மத்திய-மாநில அரசுகளின் மருத்துவக் கல்வியின் விதிமுறைப்படி மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com