சுந்தரலிங்கனாா் பிறந்த தினம்: அதிமுகவினா் மாலையணிவிப்பு

முதுகுளத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கனாா் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அதிமுக ஒன்றியக் கழகத்தின் சாா்பில், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் படைத் தளபதியாக இருந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தரலிங்கனாரின் 251-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது வெண்கலச் சிலைக்கு, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், ராமநாதபுரம் அதிமுக மாவட்டக் கழகச் செயலா் எம்.ஏ. முனியசாமி, ஒன்றியக் கழகச் செயலா், ஒன்றியத் தலைவா் ஆா். தா்மா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் எஸ்.ஆா். சங்கரபாண்டியன், ஒன்றிய இளைஞா் அணி செயலா் தூரி மாடசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் எஸ்.எம்.சேகா் மற்றும் அச்சமுதாயத்தினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com