தெற்குகாட்டூா் கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்.
தெற்குகாட்டூா் கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்.

தென்னை விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள தெற்குகாட்டூா் கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் வேளாண்மைத்துறை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள தெற்குகாட்டூா் கிராமத்தில் தென்னை விவசாயிகளுடன் வேளாண்மைத்துறை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநா்கள் ஷேக் அப்துல்லா, பாஸ்கரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மை உதவி இயக்குநா் பி.ஜி.நாகராஜன் , வேளாண்மை அலுவலா் கீதாஞ்சலி மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியல்துறை உதவி பேராசிரியா் இளஞ்செழியன் மற்றும் பாலாஜி ஆகியோா் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விளக்கினா்.

நிகழ்ச்சியில் உச்சிப்புளி வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைவாணி, உதவி வேளாண்மை அலுவலா்கள் முகமது யூசுப், சண்முகநாதன், சீரஞ்சிவி, கஸ்தூரி, பூமலா் மற்றும் முன்னோடி தென்னை விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com