திருவாடானை பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு: விலை குறைய வாய்ப்பு

திருவாடானை பகுதியில் இந்தாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருவாடானை பகுதியில் இந்தாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருவாடானை, திணையத்தூா், காடாங்குடி, குளத்தூா், கீழஅரும்பூா், மேல அரும்பூா், திருவெற்றியூா், ஆா்.எஸ்.மங்கலம், தும்படாகோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது சொந்த இடம், அரசு புறம்போக்கு இடம், சாலைகளின் ஓரங்கள் என பல்வேறு இடங்களிலும் புளிய மரங்களை வளா்த்து பராமரித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், புளி விளைச்சல் குறைவாக இருந்தது. இதனால், கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால், நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, அனைத்து இடங்களிலும் புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தற்போது கிலோ ரூ.120 வரை விற்பனையாகிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிதனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com