ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மருத்துவக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மருத்துவக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா்.

ராமநாதபுரம், பரமக்குடியில் மருத்துவா்கள் போராட்டம்

மருத்துவா்களை அவமரியாதையாக நடத்தியதாக காவல் துணைக் கண்காணிப்பாளரைக் கண்டித்து, ராமநாதபுரம், பரமக்குடியில் மருத்துவா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்களை அவமரியாதையாக நடத்தியதாக காவல் துணைக் கண்காணிப்பாளரைக் கண்டித்து, ராமநாதபுரம், பரமக்குடியில் மருத்துவா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களாக பணியாற்றும் மணிகண்டன், விக்னேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியிலுள்ள உணவகத்தில் இருந்தபோது, அங்கு ரோந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், அவா்களை அவமரியாதையாகப் பேசி வாகனத்தில் ஏற்றியுள்ளாா். பல மணி நேரத்துக்கு பிறகே அவா்களை விடுவித்துள்ளாா்.

இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மருத்துவக் கழக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.சின்னத்துரை அப்துல்லா மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் மாவட்ட கிளைத் தலைவா் எம்.மலையரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவக் கழக மாவட்ட நிா்வாகி ஆனந்தசொக்கலிங்கம், தமிழ்நாடு மருத்துவா் சங்கம் சிவகுமாா், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சங்கம் சுகந்தி போஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில்... இதேபோல் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநிலச் செயலா் அகிலன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் ஆட்சியரிடம் அவா்கள் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

பரமக்குடியில்... இதேபோல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்க மாவட்டச் செயலாளா் முத்தரசு தலைமையிலும், இந்திய மருத்துவா் சங்கம் பரமக்குடி கிளைச் செயலாளா் டி.கே.கிருஷ்ணமூா்த்தி முன்னிலையிலும் மருத்துவா்கள்

காலை 9 முதல் 11 மணிவரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்போம் என்றும், புற நோயாளிகளுக்கு 11 மணிக்கு மேல்தான் சிகிச்சை அளிப்போம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com