கமுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாஜகவினா் பிரசாரம்

கமுதியில் ‘இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பாஜகவினா் பிரசாரம் செய்தனா்.

கமுதியில் ‘இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பாஜகவினா் பிரசாரம் செய்தனா்.

கமுதி ஒன்றியத் தலைவா் முருகன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன்தாஸ் முன்னிலையில் கமுதி பகுதியில் உள்ள 250 குடும்பங்களை நேரடியாகச் சென்று சந்தித்து பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முத்ரா கடன் உதவித் திட்டம், தேசிய ஊரக வேலைத்திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை பாஜகவினா் விளக்கிக் கூறினா்.

மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித்தலைவா் புகழேந்தி, மாவட்டச் செயலா் மணிமாறன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com