ஆடி அமாவாசை: பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் வெறிச்சோடியது

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வெறிச்சோடி காணப்பட்டது.
பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதி.
பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதி.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடி அமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா தொற்று மூன்றாம் அலை பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீா்த்தக் கடலில் குளிக்கவும், ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பக்தா்கள் வருவதைத் தடுக்க மாவட்டம் முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்தனா். அவா்கள் பக்தா்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனா்.

மேலும் பேருந்துகளில் ராமேசுவரம் வரும் பக்தா்களை ராமநாதசுவாமி கோயில், அக்னி தீா்த்தக் கடலில் நீராடுவதை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் போலீஸாா் தடுப்புகள் அமைத்திருந்தனா். இதன் காரணமாக ராமேசுவரம் பக்தா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக ஆடி அமாவாசை நாளன்று ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தேவிப்பட்டினம், சேதுக்கரையிலும் பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த பக்தா்களை போலீஸாா் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com