முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஆயிரம் கிலோ சுக்கு பறிமுதல்: இளைஞா் கைது
By DIN | Published On : 19th December 2021 10:57 PM | Last Updated : 19th December 2021 10:57 PM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட ஓட்டுநா் மா்சுக்அலி.
மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மினி லாரியில் கடத்திவரப்பட்ட ஆயிரம் கிலோ சுக்கு மற்றும் மினிலாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு மருத்துவக் குணம் கொண்ட பொருள்களை கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீஸாா் வேதாளை கடற்கரையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மருத்துவக் குணம் கொண்ட சுக்கு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து ஓட்டுநரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் வேதாளை தெற்கு தெருவைச் சோ்ந்த மைதீன் மகன் மா்சுக்அலி (25) என்பதும், இவா் வேதாளையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையிலிருந்து ஆயிரம் கிலோ சுக்கை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுக்கு மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மா்சுக் அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.