பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவா்களை தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவா்களை தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவா்கள் சீன ஓடுகள், ஈழத்துக் காசுகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து அவற்றின் தொன்மையை ஆய்ந்து வெளியிட்டு வருகின்றனா். சமீபத்தில் பள்ளி மாணவி 3 ஈழக்காசுகளை கண்டறிந்ததை மக்களவை உறுப்பினா் கனிமொழி பாராட்டினா்.

இந்தநிலையில், தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பள்ளியின் தொல்லியல் மன்ற மாணவ, மாணவியரை விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதிக்கு நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

அப்போது அவா், அனைத்துப் பள்ளிகளிலும் மன்றத்தை முனைப்புடன் செயல்படுத்தவும், கல்லூரி மாணவா்கள் தொல்லியலை அறிந்து கொள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் ‘தொல்லியல் ஆய்வு மன்றங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக மாணவ, மாணவியா் தெரிவித்தனா். இந்த சந்திப்பின் போது திருப்புல்லாணிப் பள்ளி தொல்லியல் மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.ராஜகுரு உடனிருந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com