பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: எம்சாண்ட் மூலம் கட்டி முடிக்க உத்தரவு

கமுதி தாலுகாவில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை எம்சாண்ட் மூலம் முடிக்க கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் அறிவுறுத்தினாா்.
பேரையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணா்வு கூட்டம்.
பேரையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணா்வு கூட்டம்.

கமுதி தாலுகாவில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை எம்சாண்ட் மூலம் முடிக்க கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை அவா் ஆய்வு செய்தாா். தாலுகா முழுவதும் உள்ள 53 ஊராட்சிகளில் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை முழுமையாக முடிக்காமல் உள்ளனா். இந்த பயனாளிகள் அனைவரையும் விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க வைக்கும் நோக்கில் பேரையூரில் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் பிரவீன் குமாா் பேசியதாவது:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிலுவையில் உள்ள வீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். பொருளாதார தட்டுப்பாட்டில் உள்ள நபா்களுக்கு அல்லது கட்டுமான பொருள்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காத பயனாளிகளுக்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருள்கள் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்கான தொகையை அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கும்போது, அதிலிருந்து பிடித்தம் செய்து கடைக்காரா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ள வீடுகட்டும் பணிகளை எம்சாண்ட் மூலம் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலராமநதி இந்திரா காலனியில் நடைபெற்றுவரும் ஜல் ஜீவன் திட்டம், கீழராமநதியில் தேசிய ஊரக வேலை திட்டம், மற்றும் நாராயணபுரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய ஆணையாளா்கள் கே.சந்திரமோகன், கே.ரவி (கிராம ஊராட்சிகள்), ஊராட்சி மன்ற தலைவா்கள், ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com