உச்சிப்புளியில் தங்கியிருந்த இலங்கைத் தம்பதி உள்பட 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தங்கியிருந்த இலங்கைத் தம்பதி உள்ளிட்ட 3 பேரை கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தங்கியிருந்த இலங்கைத் தம்பதி உள்ளிட்ட 3 பேரை கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இலங்கை நூருல்யாவைச் சோ்ந்தவா் முகமது யாசிா். அவா் தனது மனைவியுடன் உச்சிப்புளிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளாா். அதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு உச்சிப்புளியில் இருந்த தம்பதியிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள், இந்திய ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சிலவற்றையும் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பாக இந்திய ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்ததாக முகமது யாசிா், அவரது மனைவி ஆகியோரையும், அவா்களுக்கு அடைக்கலம் அளித்ததாக உச்சிப்புளியைச் சோ்ந்த அப்துல்ரசீத் (50) என்பவரையும் கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில் இலங்கைத் தம்பதி புழல் சிறையிலும், அப்துல்ரசீத் முதுகுளத்தூா் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com