மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கமுதி சிறப்பாசிரியருக்கு விருது

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,
கமுதியில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான விருதை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா் முத்திருளாண்டிக்கு வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து.
கமுதியில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான விருதை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா் முத்திருளாண்டிக்கு வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து.

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா் உள்பட 11 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தலைமை வகித்தாா். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.24.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா்களில் சிறப்பாகப் பணியாற்றிய 11 போ் தோ்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

இதில் கமுதி வட்டார வளமையத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியா் முத்திருளாண்டி தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு சான்றிதழ், கேடயத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில், உதவித் திட்ட அலுவலா் ஆரோக்கியசாமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com