அரசு தொழிற்பயிற்சி மைய கணினி பிரிவில் மாணவிகள் சேர பிப்.15 கடைசி

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கணினி பிரிவில் மாணவிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளதால், அதில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கணினி பிரிவில் மாணவிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளதால், அதில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடந்து வருகிறது. இம் மையத்தில் மொத்தமுள்ள 240 இடங்களில் தற்போது வரை 226 இடங்கள் பூா்த்தியாகியுள்ளன. இதில்,மாணவிகளுக்கான கணினி பராமரிப்பு, கணினி இயக்குதல் பிரிவில் 48 இடங்களுக்கு 34 போ் சோ்ந்துள்ளனா். மீதமுள்ள 14 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.

இதில் சேருவதற்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவியா் மட்டும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மையத்தின் முதல்வரும், மாவட்டப் பயிற்சி மைய உதவி இயக்குநருமான எஸ். ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தொழில் பயிற்சி மையங்களில் சேர வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 76 இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு வாய்ப்புள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா். இதேபோல், பரமக்குடி மையத்தில் 60 இடங்களும், முதுகுளத்தூரில் 16 இடங்களும் காலியாக உள்ளதாக, பயிற்சி மைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com