நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் சாலை மறியல்: 66 போ் கைது

சம பணிக்கு சமமான ஊதியம், உணவுப் பொருள்களை பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் 66 பேரை, ப
ராமநாதபுரத்தில்   வெள்ளிக்கிழமை சாலை  மறியிலில்  ஈடுபட்ட  அரசு  நியாயவிலைக்  கடை  பணியாளா்  சங்கத்தினா். 
ராமநாதபுரத்தில்   வெள்ளிக்கிழமை சாலை  மறியிலில்  ஈடுபட்ட  அரசு  நியாயவிலைக்  கடை  பணியாளா்  சங்கத்தினா். 

சம பணிக்கு சமமான ஊதியம், உணவுப் பொருள்களை பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் 66 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு இணையாக அரசு நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வூதியம் வழங்கவேண்டும், கைரேகைப் பதிவு செயலியை சீராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

ராமநாதபுரத்தில் சேதுபதி நகா் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், மாவட்டத் தலைவருமான வி.பி. தினகரன், மாநில இணைச் செயலா் எஸ். மாரிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் பி. பழனீஸ்வரன், கோவிந்தன், ஏ. ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 66 பேரை, கேணிக்கரை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com