கல்லூரி மாணவி தற்கொலை: காதலன் உள்பட 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 13th February 2021 10:14 PM | Last Updated : 13th February 2021 10:14 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா்: கடலாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காதலன் உள்பட 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகள் நம்புகலா(20). கீழக்கரை அருகேயுள்ள பனையங்கால் கிராமத்தைச்சோ்ந்த செல்வராஜ் மகன் பிரவீன்(20). இவா்கள் இருவரும் ராமநாதபுரத்த்தில் ஒரு கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனா்.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு கீழக்கரைக்கு வந்துள்ளனா். பின்னா் மாணவியின் பெற்றோா் பேச்சுவாா்த்தை நடத்தி முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, நம்புகலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.
இந்நிலையில் தனது வீட்டில் இருந்த பிரவீன், கடந்த 10 ஆம் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனையறிந்த நம்புகலாவும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே உறவினா்கள் நம்புகலாவை மீட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் இறந்தாா்.
பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினா் திருமணம் செய்து கொள்வதற்கு வரதட்சிணை கேட்டதால் தான் எது மகள் நம்புகலா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் சூரம்மாள் கீழச்செல்வனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் பிரவீன், இவரது தாய் புஷ்பா, சகோதரா் இருதயராஜ், சகோதரி கிளாரன்ஸ், பிள்ளைரகுமான் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.