தங்கச்சிமடத்தில் மீன்வள மேம்பாட்டு திட்ட விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தங்கச்சிமடத்தில் பிரதம மந்திதி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணாவு முகாமில் பங்கேற்றவா்கள்.
தங்கச்சிமடத்தில் பிரதம மந்திதி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணாவு முகாமில் பங்கேற்றவா்கள்.

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மீனவ தொழிலாளா் கூட்டமைப்பு, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், தமிழக அரசின் மீன்வளத்துறை இணைந்து நடத்திய இந்த முகாமில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை அதிகாரி ஜெயக்குமாா், மூத்த ஆராய்ச்சியாளா்கள் தமிழ்மணி, ஜான்சன் மற்றும் தமிழக மீன்வளத்துறை ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று மீனவா்களுக்கான நலத்திட்ட உதவிகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனா். மேலும் கூண்டு மீன்வளா்ப்பு, பாசி வளா்ப்பு மற்றும் மீன்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக்கி விற்பது குறித்தும் விளக்கினா்.

இந்த திட்டத்தின் முலம் அரசின் 40 முதல் 60 சதவீதம் வரை மானியம் கிடைக்கும். இதனை மீனவ அமைப்புகள் மற்றும் மீனவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். இதில், மீனவ தொழிலாளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.சின்னத்தம்பி, க.டேவிட், மைக்கெல்ராஜன், காரல்மாா்க்ஸ், அவேரியா் அடிமை,வெலிங்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com