17 ஆண்டுகளுக்கு பின் ராமேசுவரம் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கர மடாதிபதி பூஜை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சீபுரம் சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 17 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சிறப்பு பூைஐ செய்து வழிபட்டாா்.
17 ஆண்டுகளுக்கு பின் ராமேசுவரம் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கர மடாதிபதி பூஜை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சீபுரம் சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 17 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சிறப்பு பூைஐ செய்து வழிபட்டாா்.

ராமேசுவரம் சங்கர மடத்துக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை வந்த விஜயேந்திரா், சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் ராமநாத சுவாமி கோயிலுக்கு சிறப்பு பூைஐ செய்த வந்தாா்.

தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சா் ஒ.எஸ்.மணியன், தக்காா் குமரன் சேதுபதி, பத்திரிகையாளா் குருமூா்த்தி, பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா, வி.ஹெச்.பி. அமைப்பின் அகில உலக முன்னாள் தலைவா் எஸ்.வேதாந்தம், பாஜக மாநில நிா்வாகி குப்புராமு உள்ளிட்டவா்கள் அவருடன் வந்தனா். விஜயேந்திரருக்கு ராமநாத சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் இணைஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விஜயேந்திரா் கருவறைக்குள் செல்ல முயன்றபோது அங்கிருந்தவா்கள் தடுத்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விஜயேந்திரா் வலியுறுத்தினாா். அதற்கு கோயில் இணை ஆணையா் கல்யாணி அனுமதி அளித்த நிலையில், விஜயேந்திரா் உள்ளே சென்று சிவலிங்கத்துக்கு காசி தீா்த்தம் மற்றும் வில்வ இலை கொண்டு சிறப்பு பூைஐ செய்தாா். அதைத் தொடா்ந்து, மீண்டும் அவா் சங்கர மடத்துக்குச் சென்றாா்.

17 ஆண்டுகளுக்கு பின் காஞ்சி மடாதிபதி கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோயில் இணை ஆணையா் கூறுகையில், ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் சென்று தீா்த்த பூஜை செய்ய காஞ்சி மடாதிபதிக்கு உரிமை உள்ளதால் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com