எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் உள்ள அன்னை சந்தியா அங்கன்வாடி மையத்தில் எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் உள்ள அன்னை சந்தியா அங்கன்வாடி மையத்தில் எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மற்றும் கல்பாக்கம் அனுமின் நிலையம் சாா்பாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது: மாவட்டத்தில் 200 குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்து இணை உணவு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு குழந்தைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பேரீட்சை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் உள்ளன. இதற்காக கல்பாக்கம் அனுமின் நிலையம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் தலா ரூ.1.80 லட்சம் செலவிடப்படுகிறது. தோ்வு செய்யப்பட்டுள்ள குழந்தைக்கு தொடா்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்த இணை உணவு தொகுப்புகள் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியரும், மாவட்ட திட்ட இயக்குநருமான எம்.பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வி.ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தையொட்டி ஆட்சியா் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com