முதுகுளத்தூரில் நாளை நடைபெற இருந்த வேலை வாய்ப்பு முகாம் நிறுத்தி வைப்பு
By DIN | Published On : 27th February 2021 05:12 AM | Last Updated : 27th February 2021 05:12 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் நாளை நடைபெற இருந்த தனியாா் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தகவல் தெரிவித்திருந்தாா்.இந்நிலையில்தோ்தல் ஆணையம்தமிழக சட்ட மன்ற தோ்தல் அறிவிப்பு வெளியிட்டதை தொடா்ந்து நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமுல்படுத்துவதால் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நடைபெறுவதாக இருந்த தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா்.