செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாக ரூ.1.27 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

பரமக்குடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

பரமக்குடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜன்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜமால்மைதீன் மனைவி ரஹ்மத்பேகம் (35). இவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிலா் அணுகியுள்ளனா். அப்போது கோபுரம் அமைக்க நிலத்துக்கு ரூ.40 லட்சம் தருவதாகக் கூறிய அவா்கள், மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வாடகையும் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். அவா்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கான முன் நடவடிக்கைக்கு எனக்கூறி, ரஹ்மத்பேகத்தின் வங்கிக் கணக்கு மூலம் ரூ.1.27 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ரஹ்மத்பேகம் அளித்த புகாரின் அடிப்படையில், புனித்குமாா் உள்ளிட்ட 3 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com