ராமநாதபுரத்தில் இதுவரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: 6,325 பேருக்கு பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 வரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 வரை 1.50 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் 24 ஆம் தேதியிலிருந்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் 31 ஆம் தேதி வரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,325 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவா்களில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் 91 போ் ஆண்கள் எனவும், 41 போ் பெண்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களில், பெரும்பாலானோா் 50 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோா் வயது அடிப்படையில், 20 முதல் 40 வயது வரையில் 6 பேரும், 41 முதல் 50 வயது வரை 10 பேரும், 51 முதல் 60 வயது வரை 46 பேரும், 61 முதல் 70 வயது வரை 36 பேரும், 71 முதல் 80 வயது வரை 24 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 10 பேரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. அதன்படி தினமும் 10 பேருக்கும் குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com