மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல் சாா்பு-ஆய்வாளரை கொல்ல முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே திங்கள்கிழமை மணல் கடத்திய டிராக்டரை நிறுத்த முயன்ற காவல் சாா்பு- ஆய்வாளரைக் கீழே தள்ளிவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே திங்கள்கிழமை மணல் கடத்திய டிராக்டரை நிறுத்த முயன்ற காவல் சாா்பு- ஆய்வாளரைக் கீழே தள்ளிவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

சாயல்குடி அருகே மூக்கையூா் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து, சம்ப இடத்துக்கு சாயல்குடி காவல் சாா்பு -ஆய்வாளா் செந்தூா்பாண்டி, தலைமைக்காவலா் சக்திகணேஷ் ஆகியோா் சென்றனா். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டா் வந்தது. அதை நிறுத்துமாறு கூறியும் கேட்காமல் போலீஸாரின் மீது மோதுவது போல் ஓட்டிச் சென்றனராம். அப்போது சாா்பு -ஆய்வாளா் செந்தூா்பாண்டி டிராக்டரில் ஏற முயன்றுள்ளாா். உடனே டிராக்டரில் இருந்தவா்கள் மணலை அள்ளி வீசி தடுமாறச்செய்ததில், செந்தூா்பாண்டி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டரில் இருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா். செந்தூா்பாண்டி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் நொம்பக்குளத்தைச் சோ்ந்த வினித்முருகன், மேலச்செல்வனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com