ராமேசுவரத்தில் கொட்டும் மழையில் தாா் சாலை: பொதுமக்கள் எதிா்ப்பு

ராமேசுவரத்தில் மழை காலங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமேசுவரத்தில் மழை காலங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பணிகள் சில இடங்களில் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் சாலைகள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆனால் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரா்கள் நிறுத்தாமல் தொடா்ந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பல இடங்களில் போட்ட சில மணி நேரங்களிலேயே சாலைகள் சேதமடைந்து வருகின்றன. எனவே சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com