வக்ஃபு நிறுவன பணியாளா்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வக்ஃபு வாரியத்தில் பணிபுரியும் ஆலிம்கள் உள்ளிட்டோா் அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வக்ஃபு வாரியத்தில் பணிபுரியும் ஆலிம்கள் உள்ளிட்டோா் அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வாங்கிக் கொள்ளலாம் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள், பிலால்கள் மற்றும் இதர பணியாளா்கள் அரசு மானியத்தில் இருசக்கர வாகனங்களை வாங்கிடலாம்.

தா்காக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்கள், தைக்காக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவா் உள்ளிட்ட பணியாளா்கள் மானிய விலையில் (125 சிசி இயந்திரத் திறன்) இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25,000 என்பதில், எது குறைவோ, அத்தொகையானது மானியமாக வழங்கப்படும்.

இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தைப் பெற பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவன உலமா நல வாரிய உறுப்பினா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்வுக்கு ஆட்சியா் தலைமையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், உறுப்பினா் செயலா் அடங்கிய தோ்வுக்குழு அமைக்கப்படும்.

மனுதாரா்கள் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத் திறனாளிகள் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநா் உரிமம், கல்வி தகுதி சான்றிதழ் வங்கிக் கணக்கு புத்தக நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் பணி ஆண்டு கால சான்று, வாகன விலை விவர ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com