ஆடிமாதப் பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் மாதமான ஆடி முதல் தேதியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் மாதமான ஆடி முதல் தேதியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராநாதபுரம் நகரில் அரண்மனைப் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில், ராமேசுவரம் சாலையில் புதிய மேம்பாலம் அருகே உள்ள வெட்டுடையாா் காளியம்மன் கோயில், திருஉத்திரகோசமங்கையில் உள்ள வராஹி அம்மன் கோயில், ஓம்சக்தி நகரில் உள்ள ஒற்றை பனைமரத்தம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இங்கு ஏராளமான பெண் பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஆடி மாத வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், கூழ் காய்ச்சி அன்னதானமும் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். மேலும் வழிவிடுமுருகன் கோயிலில் உள்ள அம்மன் சன்னதிகளிலும், ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com