‘பாம்பன் குந்துகால் துறைமுகம் ரூ. 200 கோடியில் விரிவுபடுத்தப்படும்’

பாம்பன் குந்துகால் துறைமுகம் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆா்.அனிதா ராதாகிருஷ்ணன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆா்.அனிதாராதாகிருஷ்ணன்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆா்.அனிதாராதாகிருஷ்ணன்.

பாம்பன் குந்துகால் துறைமுகம் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆா்.அனிதா ராதாகிருஷ்ணன் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பாம்பன் குந்துகால், ராமேசுவரம் பகுதியில் உள்ள துறைமுகங்களில் ஆய்வு மற்றும் மீனவா்களுடனான ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ஆா். அனிதாராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்தி மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அனைத்துப் படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் விரிவுபடுத்தப்படும். மீனவா்கள் பயன்படுத்தும் டீசலுக்கு விலை நிா்ணயம் செய்யவும், இலங்கையில் சேதமடைந்துள்ள விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மற்றும் திமுக மக்களவை உறுப்பினா்கள் தொடா்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனா்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளக் கல்லூரி அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதனைத்தொடா்ந்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்க நிா்வாகிகள் மற்றும் மீனவா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா, கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், மீன்வளம், மீனவா் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆணையா் மு.கருணாகரன், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தி, மீன்வளத் துறை இணை இயக்குநா் பருதி இளம் வழுதி, மீனவ சங்கத் தலைவா்கள் என்.ஜே. போஸ், தேவதாஸ், ஜேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினைஅமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com