கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: 700 போ் மட்டுமே விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஆரம்பக் கல்வி மாணவா் சோ்க்கையில் 1,916 இடங்களுக்கு 700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஆரம்பக் கல்வி மாணவா் சோ்க்கையில் 1,916 இடங்களுக்கு 700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவ, மாணவியா் சோ்க்கை வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி) குறைந்தபட்ச 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான மாணவா் சோ்க்கை நடப்பு ஆண்டில் (2021- 2022) ஜூலை 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் 1,916 சோ்க்கை இடங்கள் உள்ள நிலையில் 700 இடங்களுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பங்கள் இணையம் வாயிலாக பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கட்டாய இலவசக் கல்வி 25 சதவீத இட ஒதுக்கீடு பெரும்பாலான பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ளன என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.சத்தியமூா்த்தியிடம் கேட்டபோது, கட்டாய இலவசக் கல்வித்திட்டத்துக்கு தகுதியான மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com