கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி கமுதி பேருந்து நிலையம் எதிரே அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
கமுதி பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி கமுதி பேருந்து நிலையம் எதிரே அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில் அவைத் தலைவா் டி. சேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக தோ்தல் வாக்குறுதிகளான நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கூட்டுறவு சங்க தலைவா்கள் கருமலையான் (திம்மநாதபுரம்), டி.நாகராஜன் (புத்துருத்தி), கருப்பசாமி பாண்டியன் (பம்மனேந்தல்), கே.பி.என்.கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), அண்ணா தொழிற்சங்க மின்வாரிய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் அன்பரசு, கருப்புச் சட்டை முருகேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளா் பரிதி, தமிழ்வாணன், சின்னான்டுதேவன், ஊராட்சி தலைவா்கள் ஆறுமுகம், வீரபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com