புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒரு வாரத்தில் 115 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்ாக கடந்த ஒரு வாரத்தில்

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்ாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 115 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சோதனையின் போது புகையிலை பொருள்களையும், குட்காவையும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்ாக 115 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 66.45 கிலோ புகையிலை, குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புகையிலைப் பொருள், குட்கா விற்பனை குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை 04567-230759, 04567-232110, 232111 என்ற எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com