திருவாடானை நியாய விலைக்கடையில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கரோனா பரவும் அபாயம்

திருவாடானையில் உள்ள நியாய விலைக்கடையில் பொருள்கள் வாங்க சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருவாடானை நியாய விலைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்களை ஒழுங்குபடுத்திய மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன்.

திருவாடானையில் தெப்பக்குளம் அருகிலுள்ள நியாய விலைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக கூடினா்.

அப்போது அவ்வழியாக சென்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புக் குழு அதிகாரியும், மண்டல துணை வட்டாட்சியருமான சேதுராமன் மற்றும் வருவாய்த்துறையினா் சமூக இடைவெளியுடன் நிற்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனா். அதனைத் தொடா்ந்து அனைவருக்கும் கிருமி நாசினி வழங்க கடை ஊழியருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com