ராமநாதபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை விடுக்க தெளிவான வழிகாட்டல் இல்லாததால் காவல் ஆய்வாளா்கள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியவா்கள் ஓட்டி வந்ததாக 2,500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியவா்கள் ஓட்டி வந்ததாக 2,500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே உயா் அதிகாரிகளின் தெளிவான வழிகாட்டல் இல்லாததால் அவற்றை விடுவிக்க இயலாத நிலையில் உள்ளதாக காவல் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தளா்வற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) வரை 2500 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நகா் கேணிக்கரை காவல் நிலையத்தில் மட்டும் 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மழை, வெயில் என திறந்த வெளியில் நிற்கும் அந்த இருசக்கர வாகனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பியளிக்க உத்தரவு: வாகனங்கள் பறிமுதல் மற்றும் அவை திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சட்ட நடவடிக்கை ஏதுமின்றி நிறுத்தப்பட்டது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்கிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, அபராதம் விதித்த பின் வாகனங்களை விடுவிக்க உரிய வழிகாட்டல் வழங்கப்பட்டு, உரியவரிடம் அவை திருப்பித் தரப்பட்டு வருகின்றன என்றாா்.

இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளா்கள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கு உயா் அதிகாரிகள் உரிய தெளிவான வழிகாட்டலை வழங்கவில்லை. ஆகவே தற்போது எந்த வாகனமும் விடுவிக்கப்பட வில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com