ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: தலைமைக் காவலா் வழங்கல்

பாம்பன் மீனவ கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை பாம்பன் காவல் நிலைய தலைமை காவலா் முரளிசெல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.
பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை திங்கள்கிழமை மருத்துவரிடம் வழங்கிய தலமைக்காவலா் முரளி செல்வம்.

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் மீனவ கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 100 -க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு கரோனா பரிசோதனை மட்டும் செய்யப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இல்லாததால் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனா்.

இந்த நிலையில், பாம்பன் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் முரளி செல்வம், அவரது சகோதரா் விக்னேஷ்வரன் இணைந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை பாம்பன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் திங்கள்கிழமை அளித்தனா். தலைமைக் காவலரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாம்பன் மீனவ கிராம பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com